விஜய், அஜித், தனுஷ் குறித்து ஷாரூக் கானின் ஒற்றை வார்த்தை பதில்!

விஜய், அஜித், தனுஷ் குறித்து ஷாரூக் கானின் ஒற்றை வார்த்தை பதில்!
Updated on
1 min read

விஜய், அஜித், தனுஷ் குறித்து ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார் ஷாரூக் கான்.

கடைசியாக ஷாரூக் கான் நடிப்பில் வெளியான படம் ‘ஜீரோ’. கடந்த ஆண்டு டிசம்பரில் இப்படம் வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியைத் தழுவியது. நடுவில் 'லயன் கிங்' படத்தின் இந்தி டப்பிங்கில், தனது மகனுடன் இணைந்து குரல் கொடுத்ததைத் தாண்டி இன்றுவரை ஷாரூக் கான் புதிதாக எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

சமீபத்தில் சென்னை வந்தபோது, இயக்குநர் அட்லீயைச் சந்தித்தார். அது படத்துக்கா அல்லது நட்பு ரீதியானதா என்பது குறித்து இன்னும் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது, #AskSRK என்ற ஹேஷ்டேகில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ஷாரூக் கான். அதன்படி, இன்று (அக்டோபர் 8) காலையில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் சில தமிழ் ரசிகர்களும் இணைந்துகொண்டு விஜய், அஜித், தனுஷ் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அதற்கு ஷாரூக் கான் அளித்த பதில்கள் பின்வருமாறு...

விஜய் ரசிகர்: ஒரு வார்த்தையில் விஜய் குறித்து...

ஷாரூக் கான்: அற்புதம்.

அஜித் ரசிகர்: ஒரு வார்த்தையில் அஜித் குறித்து...

ஷாரூக் கான்: எனது நண்பர்.

தனுஷ் ரசிகர்: ஒரு வார்த்தையில் தனுஷ் குறித்து...

ஷாரூக் கான்: நான் நேசிக்கும் நபர்.

இவ்வாறு ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து "பிற்காலத்தில் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு உள்ளதா" என்ற கேள்வியை ஷாரூக் கானிடம் கேட்டார்கள். அதற்கு "நடிப்பேன். ஏனென்றால் அந்த மொழி எனக்கு நன்றாகப் பரிச்சயமாகிவிட்டது" என்று பதிலளித்துள்ளார் ஷாரூக் கான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in