

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிந்திருப்பது குறித்து கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பல் வன்முறை தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஹாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குப் பதிவு இந்தியளவில் திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மணிரத்னம் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது குறித்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தங்களுடைய கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக வைரமுத்துவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "தேசத்தை நேசிப்பவர்கள், பிரதமரையும் மதிப்பதால்தான் அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இது எப்படி தேசத் துரோகமாகும்?. வியப்பு; வேதனை"