டிசம்பரில் 'தல60' படப்பிடிப்பு தொடக்கம்: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

டிசம்பரில் 'தல60' படப்பிடிப்பு தொடக்கம்: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
Updated on
1 min read

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள 'தல60' படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது. தற்போதே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத்தே இயக்கவுள்ளார். இதற்காக முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'தல60' என அழைத்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடம்பைக் குறைத்துள்ளார். மேலும், வழக்கமான சால்ட்& பெப்பர் லுக்கிலிருந்தும் வெளியேறியுள்ளார். இதில் அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மற்றும் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டிசம்பரில் படப்பிடிப்புச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இதனிடையே படத்தில் தற்போது பணிபுரிந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யாரிடம் பேசி வருகிறோம், யாரை ஒப்பந்தம் செய்கிறோம் உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் வெளியே சொல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிரதான நடிகர்கள் தேர்வைப் படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் மட்டுமே பேசி முடிவு செய்கிறார்கள். இதனால் மட்டுமே அஜித்துடன் நடிக்கவுள்ளவர்களின் பெயர்கள் இதுவரை கொஞ்சம் கூட கசியவில்லை. அஜித்துடன் நடிப்பவர்களில் பலருடைய ஒப்பந்தம் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின் போது எப்படிப் படக்குழுவினருக்கு மொபைல் போன் உள்ளிட்டவை படப்பிடிப்பு தளத்தில் தடை விதிக்கப்பட்டதோ, அதே போல் இதிலும் தடைவிதிக்க முடிவு செய்துள்ளனர். காவல்துறை அதிகாரியாக அஜித் நடிப்பதால், அவரது லுக் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் வரை வெளியே தெரியக் கூடாது என்பதில் படக்குழு தீவிரமாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in