

சென்னை
பெரிய படங்கள் ரிலீஸாகிறது என்ப தற்காக நன்றாக ஓடிக்கொண்டி ருக்கும் சிறிய படங்களை திரை யரங்குகளில் இருந்து ஒதுக்க வேண் டாம் என திரையரங்க உரிமை யாளர்களுக்கு நடிகரும், இயக்குந ருமான பார்த்திபன் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
பார்த்திபன் நடித்து, இயக்கி யுள்ள ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் சூழலில் இப்படம் தொடர் பாக நேற்று பார்த்திபன் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘ஒத்த செருப்பு’ ஒரு சினிமா அல்ல. ஒரு கலைஞனின் வாழ்க்கை கடந்த 30 ஆண்டுகளாக பெற்ற அனுபவத்தை வைத்து எடுக்கப் பட்ட ஒரு முயற்சி. இந்தப்படம் எடுத்து ரிலீஸான பிறகு இதுவரை ரூ.2 கோடி செலவு செய்து விளம் பரப்படுத்தி வருகிறேன். இதற் கிடையே பல பெரிய படங்கள் வெளி யாகி வருகின்றன. அதில் இது அடிபட்டு மக்களிடம் சென்று சேரா மல் இருந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்து கொண்டு போய் சேர்க்கிறேன்.
படம் வெளியாகி கடந்த 10 நாட் களில் நேற்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த சூழலில் சில திரையரங்குகள் புதிய படங்கள் வருகிறது என்பதற் காக ஒரு காட்சி மட்டும் படத்தை ஓட்டுவது என்கிற சூழலுக்கு வந்தி ருக்கின்றனர். நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படத்தை இன்னொரு படம் வருகிறது என்ப தற்காக ஒதுக்க வெண்டாம் என திரையரங்க உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பெரிய படங் களுக்கு இடையே இதுபோன்ற சிறிய படங்களும் வெளியாகி மக்களிடம் நல்ல ஆதரவு பெற்று வருகிறது. இந்தச் சூழலில் அதை திரையரங்குகளில் இருந்து எடுத் தால் அதை நசுக்குவது போல ஆகிறது.
இதுகுறித்து அமைச்சரும் அழைத்து பேச இருக்கிறார். திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறை அமைப்பினரிடையே யும் பேச உள்ளேன். நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படம் தொடர்ந்து திரையரங்குகளில் திரை யிடப்பட வேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.