விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன் நான்: ராம் சரண் புகழாரம்

விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன் நான்: ராம் சரண் புகழாரம்
Updated on
1 min read

நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன் என்று தெலுங்கு நடிகர் ராம்சரண் கூறியுள்ளார்

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் சிரஞ்சீவி, ராம் சரண், தமன்னா உள்ளிட்டோருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் சிரஞ்சீவியின் மகனும், 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் தயாரிப்பாளருமான ராம் சரண் பேசியதாவது:

''நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன். படப்பிப்பின் போது அவரைச் சந்திக்க முடியவில்லை. அதன் பிறகு மும்பையில்தான் அவரைச் சந்தித்தேன். அவரிடம் பேசுவதற்கு முன்பு அவரைச் சென்று கட்டியணைத்துக் கொண்டேன். சமீபத்தில் '96', 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களில் அவருடைய நடிப்பைக் கண்டு வியந்தேன். எங்கள் படத்தில் நீங்கள் நடித்திருப்பது எங்களுக்குக் கவுரவம்.

இந்தப் படம் என் தந்தைக்கு என்னுடைய பரிசு என்று அனைவரும் சொல்கின்றனர். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 10 வருடங்களுக்கு முன்பே அப்பா இந்தப் படத்தை தொடங்க முயற்சி செய்தார். ஆனால், இப்போது இருக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகளும், பட்ஜெட்டும் இல்லாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன் பிறகு இப்போது இந்தப் படத்தை என்னைத் தயாரிக்கச் சொல்லி அப்பா என்னை ஊக்கப்படுத்தினார். நான் வேறு எதுவுமே செய்யவில்லை. அவர்தான் எனக்கு இதைப் பரிசாகச் கொடுத்துள்ளார்''.

இவ்வாறு ராம் சரண் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in