தமிழனின் அடையாளம் அப்துல் கலாம்: பாரதிராஜா புகழஞ்சலி

தமிழனின் அடையாளம் அப்துல் கலாம்: பாரதிராஜா புகழஞ்சலி
Updated on
1 min read

அப்துல் கலாம் தனி மனிதர் அல்ல, தமிழனின் அடையாளம் என இயக்குநர் பாரதிராஜா புகழாஞ்சலி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைமகனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

அவருடைய மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவ சமூகத்திற்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதர் அல்ல.. தமிழனின் அடையாளம்” என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in