

கடந்த ஆண்டு போலவே ‘குடும்ப விருதுகள்’ நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரம்மாண்டமாக நடத்த உள்ளது. இதற்காக சிறந்த நட்சத்திரங்கள், நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான வாக்கு சேகரிப்பு தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக சென்னையில் ஜீ தமிழ் சேனலின் பிசினஸ் ஹெட் சிஜு பிரபாகரன், புரொகிராமிங் தலைவர் தமிழ்தாசன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விருதுகளுக்கான பிரிவுகள் குறித்து அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர், நடிகை, குழந்தை நட்சத்திரம், வில்லி, நகைச்சுவை நடிகர், தொகுப்பாளர், பிரபல மருமகள், மாமியார், சிறந்த ஜோடி, பிடித்த தொடர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சென்னை ஜவஹர்லால் நேரு உள் அரங்கத்தில் அக்டோபர் 6-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது.