

மகராசன் மோகன்
‘‘மாவட்ட அளவில் கடைசி இடத்தில் இருந்த ஓர் அரசுப் பள்ளியை, தயாளன் என்கிற ஓர் ஆசிரியர் எப்படி மாற்றினார் என்பதுதான் ‘சாட்டை’ படத்தின் களம். தேர்ச்சி விகிதத்தில் முதன்மை இடத்தை பிடிக்க வேண்டும் என ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம், அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடும் அழுத்தம் கொடுக்கின்றனர். அதனால், அங்கே படிக்கும் மாணவ - மாணவிகள் தங்களது ஆளுமைத் திறனை இழந்து ஒருவிதமான மன நெருக்கடிகளை சந்தித்து, கிட்டத்தட்ட ‘ரோபோ’ மாதிரி ஆகிவிடுகிறார்கள். இந்தச் சூழலை தயாளன் என்ற தமிழ் பேராசிரியர் எப்படி மீட்டெடுக்கிறார் என்பதுதான் ‘அடுத்த சாட்டை’ படத்தின் களம்!’’ என்று சாட்டையைச் சுழற்றுகிறார் இயக்குநர் எம்.அன்பழகன்.
’சாட்டை’, ‘ரூபாய்’ படங்களைத் தொடர்ந்து அன்பழகன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘அடுத்த சாட்டை’. இந்தப் படத்தின் உருவாக்கம் குறித்து அவரிடம் உரையாடியதில் இருந்து:
‘தயாளன்’ சமுத்திரகனி, ‘சிங்க பெருமாள்’ தம்பி ராமையா என ‘சாட்டை’ படத்தில் இடம்பெற்ற கதாபாத்திர பெயர்கள் அப்படியே இதிலும் இடம் பெற்றுள்ளதே? இந்த சாட்டை திரைக் கதையும் அதன் தொடர்ச்சிதானா?
இல்லை. அதில் சமுத்திரகனி இயற்பியல் ஆசிரியர். தம்பி ராமையா துணைத் தலைமை ஆசிரியர். ‘அடுத்த சாட்டை’ படத்தில் சமுத்திரகனி தமிழ்த்துறைப் பேராசிரியர். தம்பி ராமையா கல்லூரி முதல்வர். இந்தக் கதாபாத்திரப் பெயர்கள் ‘அப்பா’ படத்தில்கூட பயன்படுத்தப்பட்டது. மற்றபடி இப்படத்தின் கதை ’சாட்டை’ படத்தின் தொடர்ச்சி இல்லை. பார்க்கும்போது ‘சாட்டை’ பார்ப்பதைப் போல இருக்கும். இதில் அதே மாணவர்கள் கல்லூரிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பது போல கதைக்களம் அமைக்கவில்லை.
இப்படத்தின் வழியே என்னதான் சொல்ல வருகிறீர்கள்?
கல்லூரி பாராளுமன்றம் என்ற ஒரு விஷயத்தை இதில் தொட்டிருக் கிறோம். படிக்கும் காலகட்டத்தில் மாண வர்களுக்கு தனித்தன்மை வேண்டும், ஆளுமைத்திறன் வேண்டும் என்பதை இதன் வழியே தொட்டிருக்கிறோம். இது முன்பெல்லாம் இருந்த ஒரு முறை தான். ஒரு வகுப்பறை ஆசிரியர் களுக்கு சொந்தமானதா? மாணவர் களுக்கு சொந்தமானதா என ஒரு விவாதம் உள்ளது. அதையும் விவாதித்திருக்கிறோம்.
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு எந்த ஒரு மாணவனையும், ‘கெட் அவுட்’ என சொல்லி வகுப்பைவிட்டு அனுப்ப க் கூடாது என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கு ஏற்படும். அதேபோல மதிப்பெண்கள் தயாரிக்கும் இயந்திர மாக மாணவர்களை உருவாக்கக் கூடாது என்பதையும் இப்படத்தில் வலியுறுத்தியுள்ளோம். படத்தில் சுவர் கள் இல்லாத வகுப்பறை என ஒரு கருத்தை வைத்திருக்கிறோம். அதில் சில பிரச்சினைகள் எழும். இப்படி கல்லூரி வாழ்வியலுக்கான பலவற்றை இப்படம் வெளிப்படையாக பேசும்.
இப்படத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா ஆகியோரின் பங்களிப்பு பற்றி?
இருவரும் ஒட்டுமொத்த யூனிட்டை யும் மொத்தமாக கட்டி இழுத்துச் செல் பவர்கள். இவர்களோடு இருந்தாலே அளவற்ற சக்தி பிறக்கும். தினம் தினம் நம்பிக்கை கொடுப்பவர்கள். இருவரோடும் திரும்பத் திரும்ப வேலை பார்க்க வேண்டும் எனத் தோன்றும். அதோடு, படத்தில் சமுத்திரகனியோடு சேர்ந்து தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பிரபுதிலக்கின் பங்களிப்பு முக்கியமானதாகும். அதேபோல ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசைக்கு ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டிங் ஆர்.நிர்மல், கலை இயக்குநர் விஜயகுமார், பாடலாசிரியர்கள் யுகபாரதி, தே ன்மொழிதாஸ் இப்படி பல நல்ல குழு வினர் அமைந்ததால், நான் நினைத் ததைப் போலவே இப்படத்தை சிறப் பாக வடிவமைக்க முடிந்தது.
தொடர்ந்து சமுதாயப் பார்வையோடு உங்கள் படங்களை உருவாக்க என்ன காரணம்?
சினிமா என்பது மிகப்பெரிய மீடியா. இது வழியே எதையும் தவறாக சொல்லக் கூடாது என்கிற ஒரு எண்ணம்தான். அப்படி சொல்லும்போது அதில் சிறிய அளவிலாவது சமூக அக்கறை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இயக்கு நர்கள் ஷங்கர், முருதாஸ் மாதிரியான வர்கள் எவ்வளவு கமர்ஷியல் படங் கள் அளித்தாலும் அதில் சில சமூக சிந்தனையையும் நிச்சயம் தொடுவார் கள். அப்படி ஒரு முயற்சிதான் என் னுடையதும். அதுபோன்ற முயற்சி களைத் தொடர்ந்து நானும் வழங்கிக் கொண்டே இருப்பேன்.
‘சாட்டை’ படத்தில் மஹிமா நம்பியார் அறிமுகம் ஆனார். ‘அடுத்த சாட்டை’ படத்தில் அதுல்யா ரவி?
அதுல்யா ரவி இந்தப் படத்துக்கு முன்பு இரண்டு, மூன்று படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்தபோது, ‘இவங்க சரியா இருப்பாங்களான்னு பார்’ என சமுத்திரகனி சொன்னார். அதன் பிறகு தான் அவரை அழைத்து பேசினோம். தமிழ் பெண். படத்தின் கதாபாத்திரத் துக்கு சரியாக இருந்தார். இதில் ’போதும் பொண்ணு’ என்ற பெயரில் நடித்திருக்கிறார்.
அடுத்து?
இரண்டு கதைகள் ரெடி. அதில் ஒன்று நாயகியை மையமாகக்கொண்ட களம். இன்னொன்று ஹீரோவுக்கானது. அதில் விரைவில் முதல் களத்துக்கான வேலையை தொடங்க உள்ளேன்.