ராதிகாவுக்கு 'நடிகவேள் செல்வி' பட்டம் வழங்கிய படக்குழு

ராதிகாவுக்கு 'நடிகவேள் செல்வி' பட்டம் வழங்கிய படக்குழு
Updated on
1 min read

ராதிகாவுக்கு 'நடிகவேள் செல்வி' பட்டம் வழங்கி 'மார்க்கெட் ராஜா MBBS' படக்குழு கவுரவித்துள்ளது.

'ஆயிரத்தில் இருவர்' படத்தைத் தொடர்ந்து 'மார்க்கெட் ராஜா MBBS' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார் சரண். இதில் ஆரவ், ராதிகா, காவ்யா தாப்பர், நிகிஷா படேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற்று வருகிறது. இதில் படக்குழுவினருடன் சரத்குமார், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகை ராதிகாவுக்கு 'நடிகவேள் செல்வி' பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது படக்குழு. படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், படத் தயாரிப்பு, நாடகங்கள் தயாரிப்பு என பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருவதற்காக இந்தப் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது படக்குழு.

ராதிகாவின் தந்தை எம்.ஆர்.ராதா நடிகவேள் என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in