

வருண் நடிப்பில் உருவாகியுள்ள 'பப்பி' படத்தின் மூலம் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார் ஆர்.ஜே.பாலாஜி. 'தேவி', 'கடவுள் இருக்கான் குமாரு', 'காற்று வெளியிடை', 'இவன் தந்திரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து நாயகனாகவும் 'எல்.கே.ஜி' படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரேடியோவில் ஆர்.ஜே, தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், கதாசிரியர் ஆகியவற்றைத் தொடர்ந்து பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
மொரட்டு சிங்கிள் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, வருண், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் இடம்பெறும் 'சோத்துமூட்டை' என்ற பாடலின் மூலம் பாடகராக அறிமுகமாகியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. தரண் இசையமைத்துள்ளார்.
'கோமாளி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது வேல்ஸ் நிறுவனம். அக்டோபர் மாதம் இந்தப் படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி பாடியுள்ள 'சோத்துமூட்டை' பாடல்: