Published : 23 Sep 2019 07:41 PM
Last Updated : 23 Sep 2019 07:41 PM

உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாகும் மேகா ஆகாஷ்?

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக நடிக்க மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நாயகனாக நடித்துக் கொண்டே அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவருடைய நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' மற்றும் மாறன் இயக்கத்தில் 'கண்ணை நம்பாதே' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் புதிய படமொன்றைத் தொடங்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின். 'தடம்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்கவுள்ளார் மகிழ் திருமேனி. இதன் முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

முதலாவதாக இதில் நாயகியாக நடிக்க மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது. முந்தைய படங்கள் போல இந்தப் படத்தையும் த்ரில்லர் பாணியில் வடிவமைத்துள்ளார் மகிழ் திருமேனி.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக 'சைக்கோ' வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம் காட்டி வருகிறார் மிஷ்கின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x