தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் விஷால் கேவியட் மனு தாக்கல்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் விஷால் கேவியட் மனு தாக்கல்
Updated on
1 min read

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக தங்கள் தரப்பைக் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும் நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மனுதாரரின் குற்றச்சாட்டுகளில் அடிப் படை ஆதாரம் இருப்பதால் நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய் யப்படும் என்று ராதாரவி தெரிவித்தார். இந்நிலையில், இவ்வழக்கில் தங்கள் தரப்பைக் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டாம் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் நேற்று கேவியட் மனுதாக்கல் செய்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in