Published : 22 Sep 2019 11:23 AM
Last Updated : 22 Sep 2019 11:23 AM

தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை

தணிக்கையில் 'யு' சான்றிதழ் முடிவானதைத் தொடர்ந்து, செப்டம்பர் 27-ம் தேதி 'நம்ம வீட்டுப் பிள்ளை' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'ஹீரோ' படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தையும் தொடங்கினார். இரண்டில் ஒன்றை முதலில் ஒரேகட்டமாக முடிக்கத் திட்டமிட்டார்.

அதற்காக இயக்குநர் பாண்டிராஜிடம் பேசி, ஒரேகட்டமாக முடித்தும் கொடுத்தார். மே மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனைத் தயாரித்தது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்து முடிவடைந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். எந்தவொரு கட் சொல்லாமல் 'யு' சான்றிதழ் வழங்கியதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியடைந்தது. தற்போது செப்டம்பர் 27-ம் தேதி 'நம்ம வீட்டுப் பிள்ளை' வெளியாகும் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

'நம்ம வீட்டுப் பிள்ளை' பணிகள் முடிவடைந்துவிட்டதால், 'ஹீரோ' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x