வெனிஸ் சர்வதேச பட விழாவில் போட்டியிடும் விசாரணை

வெனிஸ் சர்வதேச பட விழாவில் போட்டியிடும் விசாரணை
Updated on
1 min read

72-வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விசாரணை' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

கடந்த 71 வருடங்களாக நடைபெற்றுவரும் வெனிஸ் திரைப்பட விழாவில், போட்டிப் பிரிவில் திரையிடப்படும் முதல் தமிழ் மொழித் திரைப்படம் என்ற பெருமையை 'விசாரணை' பெற்றுள்ளது. இந்த செய்தியை நடிகர் தனுஷ் ட்விட்டரில் பகிர்ந்தார். செப்டம்பர் 2 முதல் 15 வரை இந்த விழா நடைபெறவுள்ளது.

காவல்துறையின் விசாரணை முறை மற்றும் அதன் பின் உள்ள கொடூரத்தை காட்டும் படமாக 'விசாரணை' உருவாகியுள்ளது. இந்தியாவில் இன்னும் வெளியிடப்படாத விசாரணையில், தினேஷ், ஆனந்த், அஜய் கோஷ், சமித்திரகனி, முருகதாஸ், மிஷா கோஷல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக, தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி தயாரிப்பில் உருவான 'காக்கா முட்டை' படத்துக்கு சர்வதேச பட விழாவில் விருது கிடைத்தது. தற்போது அதே இணையின் இரண்டாவது படமான 'விசாரணை'யும் சர்வதேச பட விழாவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in