Published : 20 Sep 2019 10:28 AM
Last Updated : 20 Sep 2019 10:28 AM

திரை விமர்சனம் - ஒத்த செருப்பு சைஸ் 7

சட்டத்தின் பார்வையில் அனை வரும் சமம். ஆனால், எதார்த் தம் பல நேரங்களில் அப்படி இருப்பதில்லை. பின்புலம் ஏது மின்றி விளிம்பு வாழ்வில் அல்லா டும் சாமானிய மனிதர்கள் குற்ற வாளிகள் ஆகிவிடும்போது, இரும் புக் கரம் கொண்டு அவர்களிடம் கடுமை காட்டுகிறது காவல்துறை. அதுவே, எல்லா விதத்திலும் வலி யவர்களாக இருப்பவர்களைத் தெரிந்தே தப்பிக்கவிடுகிறது. காவல்துறையும் நீதி வழங்கும் அமைப்பும் காட்டும் இந்த பார பட்சத்தையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தண்டனை யில் இருந்து தப்பிக்க முயலும் ஓர் எளிய மனிதனின் கதைதான் ‘ஒத்த செருப்பு-சைஸ் 7’.

மாசிலாமணி (பார்த்திபன்), தனி யார் நிறுவனம் மூலம் பல இடங் களில் செக்யூரிட்டியாக வேலை செய்தவர். ஒரு கொலை செய்து விட்டதாக கைதாகியிருக்கும் அவரை, காவல் நிலைய அறையில் வைத்து விசாரணை நடத்துகின்ற னர்.

உடல் உறுப்புகள் ஒவ்வொன் றாக செயலிழக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மகேஷ் அவரது ஒரே மகன். சிறுவன் என்றும் பாராமல் மகேஷையும் அழைத்துவந்து காவல் நிலைய வராண் டாவில் உட்கார வைத்துவிட் டனர். தொடரும் கொலை விசா ரணையின் வழியே மாசிலாமணி யின் குடும்பம், அவரது வாழ்க்கை என ஒவ்வொன்றாக வெளிச்சத் துக்கு வருகின்றன. ஒரே மாதிரி யான தடயங்களுடன் பல கொலைச் சம்பவங்கள் நடந்திருப்பதும் தெரியவருகிறது. குறிப்பாக கொலை நடந்த இடங்களில் 7 நம்பர் அளவுகொண்ட ரப்பர் காலணி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கிடைக்கிறது. மாசிலா மணிக்கும் அந்தக் கொலைகளுக் கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா, கொலை நடக்கும் இடங்களில் தடயமாகக் கிடைக்கும் ஒத்த செருப்பை விட்டுச் செல்வது யார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்களை மெல்ல மெல்ல விடுவித்துச் சொல்கிறது திரைக்கதை.

படத்தில் அபூர்வமானதும், சவா லானதுமான அம்சம், முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றான மாசிலாமணி மட்டுமே திரையில் தோன்றுவது! அவரை விசாரிக்க வரும் உயரதிகாரி, காவல் நிலை ஆய்வாளர், தலைமைக் காவலர், மாசிலாமணியின் மகன், அவனைப் பார்த்துக்கொள்ளும் பெண் காவ லர், மாசிலாமணியின் மனைவி, கொலையாகும் கதாபாத்திரங்கள் உட்பட திரையில் காட்டப்படாத அனைவரும் குரல்வழியாகவே நமக்கு அறிமுகமாகின்றனர்.

விசாரணை அறையின் ஜன்ன லுக்கு வெளியே இருக்கும் மரத் தில் வாழும் பறவை, ஒரு பூனை ஆகியவை, அவை எழுப்பும் ஒலிகள் வழியே நமக்கு அறிமுகமாகின்றன. ஆனால், மாசிலாமணி கதாபாத்திரம் வார்க்கப்பட்ட விதம், அது பேசும் வசனங்கள், அந்த பாத்திரத்தை ஏற்றிருக்கும் பார்த்திபன் எனும் சிறந்த நடிகரின் வெளிப்படுத்தும் திறன், குரல்வழியே நமக்கு அறிமுகமாகும் கதாபாத்திரங்க ளின் தோற்றத்தை, நமது மனத்திரை யில் உடனுக்குடன் கற்பனை செய்து விரித்துக்கொள்ளும் மாயத்தைச் செய்யும் குரல் நடிப்புகள், மிக மிக முக்கியமாக மனக்காட்சியை முழுமையாக விரிவடையச் செய்யும் ஒலி வடிவ மைப்பு ஆகியவை படத்தை உலகத் தரமான இடத்தில் வைக்கின்றன.

ஒரு சிறந்த திரைக்கதையும், தலைசிறந்த தொழில்நுட்பமும் இணைந்ததால், ஒரே ஒரு கதா பாத்திரமே விடுபட்ட கதாபாத்தி ரங்களின் முகத்தையும் நமக்கு விரித்துக் காட்டிவிடுகிறது.

மாசிலாமணி கதாபாத்திர வார்ப்பைப் பொறுத்தவரை, அவர் ஒன்றுக்கொன்று தொடர்பு இல் லாத வகையிலேயே போலீஸ் விசாரணைக்கு பதில் அளிக்கி றார். ஆனால், அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட தாக இருப்பது திரைக்கதையின் பிடிமானத்தை உறுதிசெய்வதுடன் கதாபாத்திரத்தின் மனச்சிதைவை நிறுவும் வேலையையும் செய்து விடுகிறது.

ஒரே அறை, ஒரே நடிகர் என்பதை எல்லாம் தாண்டி சுமார் இரண்டு மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுவிடுகிறார் திரைக் கதையாசிரியர் பார்த்திபன்.

சமகாலத் தொழில்நுட்ப வளர்ச்சியும், பெருத்து வீங்கிச் செல்லும் ஏற்றத் தாழ்வுகளும் ஒரு சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என் பதை அழகாகவும், நாசூக்காகவும், மறைமுக விமர்சனமாகவும் வெளிப்படுத்திவிடுகிறார் இயக்கு நர் பார்த்திபன்.

சற்றே மனப் பிறழ்வுக்கு உள்ளானவர்போல அவரது நடவ டிக்கை காணப்பட்டாலும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்துகொள் கிறார். மனைவி உஷாவின் அழகை விவரிக்கும்போதும், உஷாவுக்கும் தனக்குமான காதல் உறவை எடுத்துச்சொல்லும்போதும் தனது குற்றத் தருணங்களை விவரிக் கும்போதும், தான் ஒரு நல்ல நடிகர்தான் என்பதை நிரூபிக்க முயன்றிருக்கிறார். விசாரணையின் போது போலீஸாருக்கு பதில் அளித்துக்கொண்டே தன் மகன் சாப்பிட்டானா, மருந்துகள் எடுத்துக் கொண்டானா என்பதை எல்லாம் விசாரித்து அறிந்துகொள்ளும் பாசமிக்க தந்தையாக அவர் காட்டும் தவிப்பு நேர்த்தியின் உச்சம்.

‘இத்துப்போன உறவைவிட அத்துப்போன உறவே மேல்’ என் பது போன்ற பல வசனங்கள், பார்த் திபனுக்கே உரிய நக்கல், நையாண் டிச் சுவையுடன் நெகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குகின்றன. அதேநேரம் சில உரையாடல்கள் நீண்டுகொண்டே போவதால் ஏற்ப டும் அயர்ச்சியைத் தவிர, பெரும் பகுதி படத்தை திரையுடன் ஒன்றிப் பார்த்துவிட முடிகிறது.

கணவன் தரப்பில் எந்தத் தவறும் காட்டப்படாமல் மனைவி தரப் பையே முழு குற்றவாளியாக்கியது சற்று நெருடலாக இருக்கிறது.

ஒரே அறைக்குள் சுழன்றாலும் அயர்ச்சி ஏற்படுத்தாத ராம்ஜியின் கேமரா, சிறு துண்டுப் பாடலும், பின்னணி இசையும் தந்திருக்கும் சந்தோஷ் நாராயணன், சி.சத்யா, ஒலி வடிவமைப்பு மூலம் காட்சி களை கற்பனை செய்துகொள்ள ஊக்கம் தந்த ரசூல் பூக்குட்டி ஆகியோர் படத்தின் ஏனைய தூண்கள்.

தமிழ் சினிமாவில் புதுமையாக வும், வித்தியாசமாகவும் சிந்திக்க வும் செயல்படவும் வேண்டும் என்ற தீராத் தாகம் கொண்டவர்களில் ஒருவரான பார்த்திபன், இந்தப் படத்தின் மூலம் அந்தத் தாகம் தனக்கு இன்னும் வற்றிவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

‘ஹவுஸ்ஃபுல்’, ‘குடைக்குள் மழை’, ‘கதை, திரைக்கதை, வச னம் இயக்கம்’ போன்ற அவரது சோதனை முயற்சித் திரைப்படங்க ளின் வரிசையில் உள்ளடக்கம், உருவாக்கம், சுவாரஸ்யம் ஆகிய வற்றுடன் உள்ளத்தைத் தொடுவ திலும் புதிய உச்சத்தைத் தொட்டி ருக்கிறது ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இரண்டு மணிநேரம் சற்றும் எதிர்பாராத ஒரு திரை அனுப வத்தைப் பெற விரும்பும் யாரும் ‘ஒத்த செருப்பை’ அணிந்து பார்த்து ஆச்சரியப்பட.. திரையரங்கு சென்று வரலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x