

தன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியதற்கு நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்
'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து 'நானும் ரவுடிதான்', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகளைக் கவனித்து வருகிறார்.
'நானும் ரவுடிதான்' படத்தின் போதுதான் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து இருவருமே ஒன்றாகப் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். இருவருமே திருமணம் செய்யாமல், ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
இன்று (செப்டம்பர் 18) இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு நேற்றிரவு (செப்டம்பர் 17) அவரது நண்பர்கள் மற்றும் தனது திரையுலக நண்பர்கள் என அனைவரையும் அழைத்து விக்னேஷ் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடினார் நயன்தாரா. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை இன்றைய சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகின.
நயன்தாராவின் இந்தக் கொண்டாட்டம் தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே. இனிமையான பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நன்றி என் தங்கமே.
ஆசிர்வதிக்கப்பட்ட பிறந்த நாள். என்னுடன் இருந்த அனைத்து அன்பார்ந்த நண்பர்களுக்கும் நன்றி. இனிமையாக, மறக்க முடியாததாக மாற்றினீர்கள். உங்கள் அனைவரின் வருடமும் அற்புதமாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இதனுடன் தன்னுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்