Published : 16 Sep 2019 10:24 AM
Last Updated : 16 Sep 2019 10:24 AM

ஆர்யா ஜோடிக்கு சூர்யா ஜோடி அறிவுரை

சூர்யா நடிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் தயாராகியுள்ள 3-வது படம் இது. மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல் என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், சூர்யாவுடன் ஒரு நேர்காணல்..

‘காப்பான்’ எப்படி அமைந்தது?

தனிப்பட்ட ஒருவர் வாழ்க்கையில் போராடி எப்படி முன்னுக்கு வருகிறார் என்பதுபோன்ற கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ்வாறு முன்னுக்கு வந்தவர்களில், விளையாட்டு வீரர் கள், திரையுலக பிரபலங்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை இருக் கிறது. ஆனால், அவ்வாறு திறமை வாய்ந்த பலர் வெளியே தெரியாமலே இருக்கிறார்கள். SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் அந்த ரகத்தை சேர்ந்தவர்கள். டெல்லி அருகே உள்ள எஸ்பிஜி பயிற்சி மையத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது வாழ்க்கை மிகவும் என்னை பாதித்தது. அவர்களைப் பற்றிய படம்தான் ‘காப்பான்’. இந்த படம் மூலமாக அவர்கள் மீது ஒரு வெளிச்சம் விழுகிறது என்றால் மகிழ்ச்சி. நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே இப்படத் தில் கதையாக கோர்க்கப்பட்டுள்ளன. நம் கற்ப னையைவிட நிஜத்துக்கு பலம் அதிகம்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 3-வது முறையாக நடித்துள்ளீர்கள். அவரைப் பற்றி..

உண்மையாக உழைக்கும் இயக்குநர்களில் ரொம்பவே பிடித்தவர் கே.வி.ஆனந்த். கமர்ஷியல் படங்கள் ஒரு ஆவணமாக இருக்க வேண்டும் என நினைப்பார். எந்த காட்சியாக இருந்தாலும், முடிந்த அளவுக்கு கமர்ஷியல் பாணியில் யோசிப் பார். ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களுக்கு எவ்வளவு உழைத்தார் என்பதை அருகே இருந்து பார்த்தி ருக்கிறேன். அவருடன் படம் பண்ண வேண்டும் என்றால் எப்போதுமே தயாராக இருப்பேன்.

மோகன்லாலுடன் நடித்த அனுபவம்..

என் நெருங்கிய நண்பர் ராஜாவிடம் பேச முடியாத விஷயங்களைக்கூட மோகன் லாலிடம் பேசிவிட முடியும். உடன் பழகுபவர் களுடன் அந்த அளவுக்கு ஒன்றிவிடுவார். ‘எந்நேரமும் நான் உங்கள் நண்பர்’ என் பார். பாடுவது, சமைப்பது, பல மொழி களில் பேசுவது என பன்முகத் திறமை கொண் டவர். அதனால், எதைப் பற்றியும் அவரிடம் பேசலாம். நாம் எந்த சூழலில் இருக்கி றோமோ, அதற்கேற்ப மாறிவிடுவார். நாம் நடிப்போம்; அவர் அப்படியல்ல. ஏனென் றால், மனதளவில் அந்த கதாபாத்திர மாகவேதான் அவர் இருப்பார்.

பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு பாதுகாப்பு என நடித்துள்ளீர்கள். உங்களுக்குப் பிடித்த பிரதமர் யார்?

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று யாரும் இல்லை. அரசியல் என்றாலே இரு பக்கங்களும் இருக்கும். ஒருசில சம்பவங்களுக்காக குரல் கொடுத்த விதத்தில் சிலரை பிடிக்கும். ஒட்டுமொத்தமாக இவர்களை ரொம்ப பிடிக்கும் என கைகாட்ட முடியவில்லை.

சமூகப் பிரச்சினை குறித்து சமீபமாக நிறைய பேசுகிறீர்கள். கல்விக் கொள்கை குறித்து நீங்கள் பேசியதுகூட விஸ்வரூபம் ஆனதே...

எனக்கு சரி என்று பட்டதைப் பேசினேன். அதில் சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். கல்வி உதவிகள் வழங்குவதற்காக ஆண்டுதோறும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வாங்குகிறோம். வீடு எங்கே, பெற்றோர் என்ன பண்றாங்க என ஒவ்வொரு விஷயமும் பார்க்கி றோம். கஷ்டப்படும் நிலையில் பலரும் இருக்கி றார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, ‘பார்த்து படிச்சுக்கோப்பா’ என்று உதவி மட்டும் செய்துவிட்டு போக முடியவில்லை. நடக்கும் விஷயங்களை எப்படி கண்டுகொள்ளாமல் இருக்க முடியும். என்னோடு இருக்கும் குழுவினர் அனைவரின் மனதிலும் ஒரு வலி இருந்தது. எப்படி பேசாமல் இருப்பது. பலரும் பேசினார்கள். அதன் பிறகு நானும் பேசினேன்.

ஆனால், நீங்கள் பேசிய பிறகுதானே பெரிதானது?

‘‘தீமை நடக்கிறது என்று தெரிந்து அதை எதிர்க்காமல் அப்படியே விடுபவர்கள் அதனுடனே பயணிக்கிறவர்கள்’’ என்று ஜோதிகா படத்தில் ஒரு வசனம் வரும். 2 ஆயிரம் கிராமங்களில் இருக்கும் பள்ளிகளுடன் இணைந்து பணிபுரிகிறோம். அங்கு நடப்பது சரியாக இல்லை என்று தெரிந்து பேசினேன். பலரும் குரல் கொடுத்தனர், அதில் என்னுடையதும் ஒன்று. நடிகர் என்பதால் என் குரல் அனைவருக்கும் போய் சேர்ந்தது. தவறு நடப்பது தெரிந்தும், இன்னொருத்தர் சொல்ல வேண்டும் என்று பலரும் காத்திருக்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும்.

ஆர்யா - சாயிஷா நட்சத்திர ஜோடிக்கு சூர்யா - ஜோதிகா நட்சத்திர ஜோடி ஏதேனும் அறிவுரை தந்துள்ளதா?

திரையுலகில் நட்சத்திர ஜோடிகள் சேர்ந்து வாழ்வது அபூர்வமாக தெரி கிறது. நானும், ஜோதிகாவும் திருமணம் செய்யும்போதுகூட பல முன்னணி ஜோடி கள் விவாகரத்து என்று பேசிக் கொண்டி ருந்தார்கள். அப்பாவும் இதை சொன் னார். எனவே, அதையே சவாலாக எடுத்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன். அதிக நெருக்கமாக இருப்பவர்களுக்குக்கூட விவாகரத்து என்பது சாதாரணமாகி விட்டது. திருமணமானதும் நிறைய விஷயங்கள் மாறின. திருமணமான 2 ஆண்டுகள் வரை, எங்கள் இருவருக் கும் பரஸ்பர புரிதல் நிறைய தேவைப்பட் டது. என்னை மட்டுமல்லாமல், என் குடும்பத் தையே நம்பி, ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார் ஜோதிகா. இப்படி எனக்குத் தெரிந்த விஷயங் களை, எங்கள் வீட்டில் நடந்ததை ஆர்யா - சாயிஷா தம்பதியிடம் கூறியிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x