முதன்முறையாக அப்பாவுடன் இணைந்து பணியாற்றுகிறேன்: யுவன் நெகிழ்ச்சி

முதன்முறையாக அப்பாவுடன் இணைந்து பணியாற்றுகிறேன்: யுவன் நெகிழ்ச்சி
Updated on
1 min read

‘மாமனிதன்’ படத்துக்காக முதன்முறையாக அப்பாவுடன் இணைந்து பணியாற்றுகிறேன் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘மாமனிதன்’. விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்துள்ள இந்தப் படத்தில், ஷாஜி சென், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார். ‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து யுவன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா மூவரும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் இருந்து வருகிறது. இன்னும் இறுதிக்கட்டப் பணிகளில் சில முடியவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், இளையராஜா குறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. “அப்பாவும் நானும் முதன்முறையாக இணைந்து பணியாற்றுகிறோம். இசை ரசிகர்களுக்கு ‘மாமனிதன்’ படத்தின் இசை நிச்சயம் சர்ப்ரைஸாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

மூவரும் இணைந்து இசையமைப்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in