

புதுச்சேரி
புதுச்சேரி செய்தி விளம்பரத் துறை, நவதர்சன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்பட விழா - 2019 ஐந்து நாட்களுக்கு புதுச் சேரியில் நடைபெறுகிறது.
இத்திரைப்பட விழா இந்தியா விலேயே புதுவையில் மட்டும் தான் 36 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து திரைப்பட விழாவை நடத்து கிறது. அத்திரைப்படங்களில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்தை தேர்வு செய்து புதுவை அரசு விருது வழங்குகிறது. நேற்று மாலை முருகா திரையரங்கில் இதற்கான விழா தொடங்கியது.
2018ம் ஆண்டு சிறந்த திரைப் படத்துக்கான சங்கரதாஸ் சுவாமி கள் விருதினை 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்துக்காக அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பெற்றார். விருதை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத் துடன் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசும் விழாவில் தரப்பட்டது.
நேர்மையான படங்கள் தொடரும்
நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது:
கடந்தாண்டு இந்நேரம் இறுதி கட்ட படப் பணிகளில் இருந்தேன். மக்கள் எப்படி இப்படத்தை ஏற்பார் கள் என்ற அச்சம், பயத்துடன் பணிபுரிந்த காலம் அது. திரைப் படம் வெளியாகி ஓராண்டாகியும் உரையாடல் உக்கிரமாகவே இருக் கிறது. நான் முதல்பட இயக்குநர் தான். குறை, நிறைகளுடன்தான் இப்படத்தை தந்துள்ளேன்.
விருதுகள் குறித்து யோசிக்க மனவலிமை இல்லை. அப்போது இப்படத்தை பத்து பேர் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே இருந் தது. பெரிய அளவிலான வெற்றியு டன் சமூக அங்கீகாரம் கிடைத்துள் ளது. அதுவே எனக்கு கனமாக உள்ளது.
தேசிய விருது கிடைக்கா தது தொடர்பாக வருந்தியோருக்கு நன்றி. அவ்வுள்ளங்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன். முதல் திரைப்படத்தின் நோக்கம் நிறைவேறியது. அடுத்ததாக அதே நேர்மை, நியாயத்துடன் திரைப்படம் எடுக்க வல்லமை கிடைத்துள்ளது. தற்போது இதேபோல் உள்ள கலைஞர்களுக்கு தேவை ஆதரவு மட்டும்தான்.
அடுத்த தலைமுறைக்கு சாதி சுமையை கடத்த கூடாது என்ற நினைக்கும் பெற்றோரே அதிகம். ஏனெனில் சாதி, மதம் தொடர் பான சுமையின் வலி தற்போதுள் ளோருக்கு தெரியும்.
அடுத்த தலைமுறைக்கு சாதி சுமையற்ற வாழ்வு தரும் பொறுப்பு நமக்குண்டு. சாதிக்கு எதிரான பாய்ச்சலிலும், சாதியை புறந் தள்ளி விட்டு போய் விடும் நிலை யில் இன்றைய இளைய தலை முறையில் உள்ளனர்.
இதற்கு அகம் சார்ந்த கவனிப்பு தேவை. அகம் சார்ந்து பேசுவது கலைதான். அதனால் கலை சார்ந்து குழந்தைகளை வளர்ப்பது அவசியம் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வை தொடர்ந்து, 'பரி யேறும் பெருமாள்' திரைப்படம் திரையிடப்பட்டது.