செய்திப்பிரிவு

Published : 10 Sep 2019 20:51 pm

Updated : : 10 Sep 2019 20:54 pm

 

ப்ரியா மணி - மனோஜ் பாஜ்பாய்- சந்தீப் கிஷன் நடிக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ்

priya-mani-manoj-bajpai-sandeep-kishan-starring-the-family-manwave-series-released-on-amazon-prime

மனோஜ் பாஜ்பாய் - ப்ரியா மணி - சந்தீப் கிஷன் கூட்டணியில் ‘தி ஃபேமிலி மேன்’எனும் த்ரில்லர் வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் செப்டம்பர் 20-ம் தேதி முதல் வெளியாக உள்ளது.

அமேசான் ப்ரைம் தற்போது பெரிய பொருட்செலவில் ‘தி ஃபேமிலி மேன்’என்ற அடுத்த வெப் சீரிஸை வெளியிட உள்ளது. வெளியிடவுள்ளார்கள். இதில் தேசிய விருதுபெற்ற நடிகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோஜ் பாஜ்பாய், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியா மணி, ‘மாநகரம்’மூலம் பிரபலமான சந்தீப் கிஷன், நீரஜ் மாதவ், ஷாரிப் ஹாஷ்மி, குல் பினாங், தர்ஷன் குமார், சன்னி ஹிந்துஜா மற்றும் ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோரி நடிக்கிறார்கள்.

'ஸ்ட்ரீ', 'கோ கோவா கான்', 'ஷார் இன் த சிட்டி' ஆகிய திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்ற இரட்டை இயக்குநர்கள் என்று பாராட்டப்பட்ட ராஜ் & டி.கே (ராஜ் நிடிமோரு கிருஷ்ணா டி.கே) இருவரும் இந்த வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் தளத்திற்குள் நுழைகிறார்கள். இதில் 10 அத்தியாயங்கள் வேடிக்கையான மற்றும் அதிகமாக மிரள வைக்கும் த்ரில்லர் தருணங்களைக் கொண்டுள்ளது. இந்த வலைத் தொடரை டி2ஆர் (D2R) பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

‘தி ஃபேமிலி மேன்’ஸ்ரீகாந்த் திவாரி என்ற மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைக் கூறும் படமாக இருக்கும். தேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புகளையும் கவனித்து சிறப்பாகச் செயல்படுகிறார் என்பது தான் ‘தி ஃபேமிலி மேன்’.

10 அத்தியாயங்களை உள்ளடக்கிய ‘தி ஃபேமிலி மேன்’அமேசான் ப்ரைம் வீடியோவில் வரும் செப்டம்பர் 20-ம் தேதி முதல் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, ஜெர்மன், ஜப்பான், பிரஞ்சு, இத்தாலி, பிரேசில், போர்ச்சுகீசு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும், 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியாகிறது.


ப்ரியா மணிமனோஜ் பாஜ்பாய்சந்தீப் கிஷன்தி ஃபேமிலி மேன்வெப் சீரிஸ்அமேசான் ப்ரைம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author