செய்திப்பிரிவு

Published : 10 Sep 2019 19:24 pm

Updated : : 11 Sep 2019 14:58 pm

 

‘துப்பறிவாளன் 2’ படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா

ilayaraja-music-for-vishal-thupparivaalan-movie

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. 2017-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. கணியன் பூங்குன்றன் என்ற துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தில் விஷால் நடித்தார்.

விஷால் ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்த இந்தப் படத்தில், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ், சிம்ரன், ஜான் விஜய், வின்சென்ட் அசோகன், ஷாஜி சென், ஜெயப்பிரகாஷ், அஜய் ரத்னம், தலைவாசல் விஜய், ரவிமரியா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த இந்தப் படத்துக்கு, அரோல் கொரோலி இசையமைத்தார். விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

விஷால் திரைத்துறைக்கு வந்து 14 ஆண்டுகள் முடிந்து, இன்று 15-வது ஆண்டு தொடங்கியுள்ளது. இந்நிலையில், ‘துப்பறிவாளன் 2’ படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.


IlayarajaIllayarajaIlayaraja musicVishalThupparivaalanThupparivaalan 2MysskinVishal 15Vishal film factoryதுப்பறிவாளன் 2இளையராஜாமிஷ்கின்துப்பறிவாளன்சுந்தர்.சி
Popular Articles

You May Like

More From This Category

More From this Author