

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு ஏற்கெனவே ஆவணப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என பலமுறை படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது ‘பசும்பொன் தெய்வம்’ என்ற தலைப்பில் அவரது முழுமையான வாழ்க்கை வரலாற்றை 2 மணி நேரத் திரைப்படமாக இயக்கியுள்ளார் மூத்த தமிழ் அறிஞரும், இயக்குநருமான சூலூர் கலைப்பித்தன். இதில், தேவரின் பன்முகஆளுமைகளை முழுமையாக பதிவு செய்திருப்பதாக பெருமிதத்தோடு கூறுகிறார் இயக்குநர். படப்பிடிப்பு முடிந்து, பின்னணி இசை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இப்படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது.