

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடர் 400 அத்தியாயங்களை கடந்துள்ளது. தொடர் முழுக்ககாஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் படமாக்கப்படுவதால் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் கிராமத்து வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்கியுள்ளனர். இதில் கண்மணியாக நடிக்கும் ஸ்வாதி கூறியபோது, ‘‘தமிழில் இது எனக்கு முதல் தொடர். நெகடிவ் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், திரில்லான அனுபவம். தொடரில் ராசாத்தியாக நடிக்கும் அஸ்வினியும் நானும் திருக்கழுக்குன்றத்தில் ஒரே வீட்டில் தங்கி ஷூட்போகிறோம். ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். இப்போ, சொந்த ஊரான பெங்களூருவைவிட இந்த ஊர் ரொம்ப பிடிச்சுப்போச்சு’’ என்றார்.