#ProudWife : பெருமிதப்பட்ட ஆர்யா மனைவி சயீஷா

#ProudWife : பெருமிதப்பட்ட ஆர்யா மனைவி சயீஷா
Updated on
1 min read

#proudwife என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் ஆர்யாவின் மனைவி சயீஷா.

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மெளனகுரு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சாந்தகுமார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது, சினிமா ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் படமாகத் திகழ்கிறது. இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படம் வெளியாகி 8 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார் சாந்தகுமார். ‘மகாமுனி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஆர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஒரு ஆர்யாவுக்கு ஜோடியாக இந்துஜாவும், இன்னொரு ஆர்யாவுக்கு ஜோடியாக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர்.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் எடிட் செய்துள்ளார். ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட், அருள்தாஸ், தீபா, யோகி, இளவரசு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம், இன்று (செப்டம்பர் 6) ரிலீஸாகியுள்ளது. எனவே, தனது கணவர் ஆர்யாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை சயீஷா.

“வாழ்த்துகள் என்னுடைய அன்பான ஆர்யா. இன்று ‘மகாமுனி’ படம் ரிலீஸாகியுள்ளது. மிகச்சிறப்பான இந்தப் படத்தை அனைவரும் தியேட்டருக்குச் சென்று பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ள சயீஷா, #proudwife என்ற ட்ரெண்டையும் பதிவு செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in