

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தில் கலையரசன், ப்ரித்வி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
'புறம்போக்கு' படத்தைத் தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'லாபம்'. இந்தப் படத்தை விஜய் சேதுபதி மற்றும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' இயக்குநர் ஆறுமுககுமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்த முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காகத் தயாராகி வருகிறார்கள்.
தற்போது இதில் விஜய் சேதுபதியுடன் நடிக்க கலையரசன், ப்ரித்வி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரைப் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக 'சங்கத்தமிழன்' வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'மாமனிதன்', 'கடைசி விவசாயி', 'சைரா', 'லாபம்' உள்ளிட்ட படங்கள் பல்வேறு நிலைகளில் தயாரிப்பில் உள்ளன.