

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இயக்குநர்கள் விஜய், பாரதிராஜா, பிரியதர்ஷினி ஆகியோர் முயற்சி எடுத்தனர். இதில், பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் படத்தை இயக்குவதாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் ஜெயலலிதா பாத்திரத்தில் நித்யா மேனன் நடிப்பதாக அறிவிப்பும் வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
‘தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கும் படத்தில், ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில்தான் ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப் சீரிஸாக இயக்கி முடித்துள்ளார் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும், எம்ஜிஆராக இந்திரஜித்தும், சோபன் பாபுவாக வம்சி கிருஷ்ணாவும் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸுக்கு ‘குயின்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.