தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி: தாணு தயாரிக்கிறார்

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி: தாணு தயாரிக்கிறார்
Updated on
1 min read

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தக் கூட்டணியின் ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

'அசுரன்' படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க லண்டனுக்குச் சென்றுள்ளார் தனுஷ். அங்கு முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, திரும்பியவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கர்ணன்' படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதனை தாணு தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

தாணு தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார் தனுஷ். 'அசுரன்', மாரி செல்வராஜ் இயக்கும் படம் ஆகியவற்றைத் தொடர்ந்து 3-வது படமாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படம் என்பது இறுதியானது.

இதன் ஒப்பந்தம் கையெழுத்து சமீபத்தில் முடிந்துள்ளது. தனுஷ் - செல்வராகவன் - யுவன் மூவருமே இணையவுள்ளனர். மூவருக்குமான ஒப்பந்தமும் இறுதி செய்து கூட்டணியை அறிவித்துள்ளது படக்குழு,

படப்பிடிப்பு எப்போது உள்ளிட்ட விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளனர். 2020-ம் ஆண்டில் தான் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in