

பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டு பாராட்டு பெற்ற படம் ‘கானல் நீர்’.
கேரள மாநிலம் கொச்சியில் ஒரு பாலத்தின் கீழ் வசிக்க நேர்ந்த குடும்பம் பற்றி நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் அடிப்படையில் இப்படம் அமைந்துள்ளது. வீடு இல்லாத பெண்மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான வாழ்க்கையை இப்படம் சித்தரிக்கிறது. இதில் கதாநாயகியாக பிரியங்கா நாயரும், முக்கிய வேடத்தில் ஹரீஷ் பெராடியும் நடித்துள்ளனர்.டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுத, சோகன்ராய் தயாரித்துள்ளார். இது நிறுவன சமூகபொறுப்பு நிதியில் (சிஎஸ்ஆர்) தயாரிக்கப்பட்ட உலகின் முதல் நன்கொடை திரைப்படம். விரைவில் வெளிவர உள்ள இப்படம், ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் நிலம் இல்லாதோர் மறுவாழ்வு, பெண்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.