Published : 02 Sep 2019 09:48 AM
Last Updated : 02 Sep 2019 09:48 AM

சைக்கிள் வாங்கித் தந்த வாய்ப்பு!- நடிகர் ஆர்யா நேர்காணல்

திரைபாரதி

கடந்த 2010-ல் வெளியான ‘மௌன குரு’ திரைப்படம் மூலம், ‘யார் இந்த படத்தின் இயக்குநர்?’ என்று கேட்கவைத்தவர் சாந்தகுமார். அவர் 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது, ஆர்யா நடிப்பில் ‘மகாமுனி’ என்ற படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இதில் ‘மகா’,‘முனி’ என அப்பா, மகனாக இரட்டைக் கதாபாத்திரங்கள் ஏற்றிருக்கிறார் ஆர்யா. இதுகுறித்து ஆர்யாவுடன் ஒரு நேர்காணல்..

நடிகர் சங்கத் தேர்தலுக்கு சைக்கிளில் வந்து ஓட்டு போட்டீர்கள்; தொடர்ந்து சைக்கிள் போட்டிகளில் பங்கேற்கிறீர்கள். சைக்கிள் மீது அப்படியென்ன காதல்?

உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்கான சிறந்த தேர்வு சைக்கிளிங். இதை தெரிந்துகொண்ட பிறகு, சைக்கிளை காதலிக்காமல் இருக்க முடிய வில்லை. அதிகம் வேண்டாம்.. தொடக்கத் தில் தினமும் அரை மணி நேரம் என வாரம் 5 நாட்கள் சைக்கிள் ஓட்டுங்கள். சனி, ஞாயிறு ரெண்டு நாள் மட்டும் சைக்கிளுக்கு லீவு விடுங்கள். 3 மாதங்களுக்குப் பிறகு, அரை மணி நேரத்தை, முக்கால் மணி நேரமாக அதிகரித்துக் கொள்ளுங்கள். 50 வயதுக்கு உட்பட்டவர் என்றால் 1 மணி நேரமாக மாற்றுங்கள். அப்புறம் என்ன.. உங்கள் சைக்கிளை நீங்களே ஒற்றைக் கையால் தலைக்கு மேல் தூக்கிக் காட்டுவீர்கள். அந்த அளவுக்கு ‘ஃபிட்னெஸ்’ வந்துவிடும். ஜிம்முக்கே போக வேண்டாம். கட்டாயம் ஹெல்மெட், ஷு அணியுங்கள். புதுப்புது சாலைகள், அருகே இருக்கும் ஊர்களுக்கு சைக்கிளில் போய் வாருங்கள். பிறகு, சைக்கிளை நீங்களும் காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

சமீபத்தில் பிரான்ஸில் நடந்த சைக்கிள் போட்டியில் கலந்துகொண்ட நீங்கள், பாதியில் திரும்பியது ஏன்?

அது 1,200 கி.மீ. இலக்கு கொண்ட போட்டி. 500 கி.மீ. தூரத்தை கடக்கும்போது, எதிர்பாராதவிதமாக முட்டியில் அடிபட்டு, செம வலி. வேறு வழி? அடுத்த போட்டியில் பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பிவிட்டேன்.

‘மகாமுனி’க்கு இயக்குநர் சாந்தகுமார் உங்களை எப்படி தேர்வு செய்தார்?

இதை நானே அவரிடம் கேட்டேன். ‘நீங்கள் பிடி வாதமான சைக்கிள் ஓட்டியாக இருப்பது தான் காரணம்’ என்றார். புரியாமல் அவரைப் பார்த்தேன். ‘ஆமாம். சைக்கிள் ஓட்டுபவர் கள் கடுமையான உடல் வலியையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை கொண்டவர்கள். நீங்கள் ஏற்க இருக்கும் கதா பாத்திரங்களுக்கு அது போன்ற மனவலிமை தேவை. அது உங்களி டம் இருக்கிறது’ என்றார். இது, சைக்கிள் எனக்கு வாங்கிக் கொடுத்த வாய்ப்பு.

அப்படியென்றால் கதையைக் கேட்காமலேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டீர்களா?

சாந்தகுமார் போன்ற இயக்குநர்களிடம் கதை கேட்கவே அவசியம் இல்லை. அவ் வளவு நம்பகத்தன்மை மிக்கவர். முதல் படத்தின் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளாத சாமானிய மனிதராகவே இன்ன மும் இருக்கிறார். இருந்தாலும் இந்த கதையை எழுத 8 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் என்று கேள்விப்பட்டபோது, வியந்து போனேன். ‘எதற்கு இவ்வளவு அவகாசம் எடுத்துக்கொண்டீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘தயாரிப்பாளர் கிரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜாவிடம் அட்வான்ஸ் வாங்கி, அதில் ஒரு பைக் வாங்கினேன். அந்த பைக்கிலேயே நாடு முழுவதையும் சுற்றிப் பார்த்துக்கொண்டே இந்த திரைக்கதையை எழுதினேன்’ என்றார்.

சாந்தகுமாரின் ‘மௌனகுரு’ படத்தில் கதாநாயகிக்கு வேலை இல்லை.. இதில் இரு கதாநாயகிகள் இருக்கிறார்களே?

இதில் ‘மகா’வுக்கு ஜோடி மகிமா. ‘முனி’க்கு ஜோடி இந்துஜா. இருவருக்கும் வலுவான பாத்திரங்கள். ஆனால் படப்பிடிப்பில் 2 பேரும் சந்திக்கவே இல்லை. ஏனென்றால், இருவரது பகுதிகளையும் இயக்குநர் தனித்தனியாக எடுத்தார். இருவரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க.

இதில் இரட்டை கதாபாத்திரம் ஏற்றிருக்கிறீர்கள். படத்தின் கதைக் களம் பற்றி..

‘மகா’, ‘முனி’ என்ற இரு கதாபாத்திரங்கள், வாழ்க்கையில் சந்திக்கும் சூழ்நிலைகள்தான் கதை. ‘டேரிங் ரியலிஸம்’ என்பார் களே, அதுதான் இந்த படம். முதலில் இயக்குநர் என்னிடம் ‘மகா’ கதாபாத்திரத்தை மட்டும் தான் விவரித்தார். ‘‘முனி கதா பாத்திரத்தை படப்பிடிப்பின் போது, உங்களிடம் இருந்து வெளிக்கொண்டு வரு வேன். அதுவரை எதுவும் கேட்காதீர்கள்’’ என்றார். நானும் வாயை திறக்க வில்லை. சொன்னபடியே நடிப்பில் என்னை வேறொரு பரிமாணத்துக்கு கொண்டுபோய்விட் டார். இது உதார் இல்லை; படத்தைப் பார்க்கும்போது இதை உணரமுடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x