

மாலைக்கண் நோயால் அலைபாயும் நாயகன், கவுரவம் கருதி, ஊராரிட மும், காதலியிடமும் அந்த விஷயத்தை மறைப்பதற்காக ஆடும் கலகல ஆட்டம்.
கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்துக்கொண்டு, மாலை 6 மணி ஆகும் முன்பே வீட்டுக்குள் அடைக்கலமாகிவிடுகிறார் மாலைக் கண் நோயால் அவதிப்படும் வைபவ். ஒருமுறை அவரது பார்வை மங் கும் நேரத்தில், கடற்கரையில் மாட் டிக் கொள்கிறார். அச்சமயத்தில், ரவுடியாகவும், அரசியல்வாதியாக வும் இருக்கும் ஆர்என்ஆர் மனோ கரனுக்கு எதிராக நடக்கும் தர்ணா போராட்டத்தின் முன்னால் தலைமை ஏற்பவர்போல உட்கார்ந்துவிடு கிறார். அப்போது, தனது கண் நோய் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்ற நோக்கத்துடன் செயல் படுகிறார். அதனால் அரசியல்வாதி யின் பகையையும், அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த தொலைக்காட்சி ஊழியர் பாலக் லால்வாணியின் காதலையும் சம்பாதித்துக்கொள்கிறார். அரசியல் வாதி ஒருபக்கம் துரத்த, காதலி மறுபக்கம் இழுக்க, இவர்களை வைபவ் எப்படிச் சமாளிக்கிறார் என்பது கதை.
கதாநாயகனின் பிரச்சினையை வைத்து, சுவாரஸ்யமான சில ஐடியாக்களுடன் கணிசமான இடங் களில் சிரிக்கவைத்து தன் நோக் கத்தில் ஓரளவு வெற்றிபெற்றிருக் கிறார் இயக்குநர் சாச்சி. முக்கியத் திருப்பங்களாக வரும் சில நகைச்சுவைக் காட்சிகளும், வசனங் களும் படு அபத்தமாகத் தோன்றி னாலும் திரைக்கதையின் ஓட்டத்தில் சிரிப்பு வரவைக்கத் தவறுவதில்லை. கச்சிதமான நடிகர்கள் தேர்வும், கதை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி வேகமாக நகருவதுமே அதற்குக் காரணம்.
எண்ணிக்கையிலும், தரத்திலும் திருப்பங்களாக விரியும் நகைச் சுவைக் காட்சிகள் பெரும்பாலான சமயங்களில் சிங்கிள் மற்றும் இரண்டு ரன்கள் என்ற அளவுக்கு தேய்ந்துவிடுகின்றன. இந்த வறட்சியான நகைச்சுவை, இரண்டு மணி நேரப் படத்தை முழுமையாக ரசிக்கப் போதுமானதாக இல்லை. என்னதான் நகைச்சுவைப் படம் என்றாலும் எண்ணற்ற தர்க்கப் பிழைகள் துருத்தித் தெரிகின்றன. கதாநாயகனுக்கு நேரும் பிரச்சினை கள் அனைத்தும் மிக எளிதா கவோ, நகைச்சுவையாகவோ முடி வடைந்துவிடுவதால் படத்துடன் ஒன்றமுடியவில்லை. மிக மிக முக்கியமாக, சில சீரியஸான காட்சி களும், வசனங்களும்கூட உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதில் உச்சமான அபத்தம், தான் எடுக்கும் முடிவுக்கு கதாநாயகி கூறும் விளக்கம்.
மாலைக்கண் நோய் என்ற ஒரு ஐடியாவைத் தவிர, கதாபாத் திரங்கள் எதுவும் புதிது இல்லை. நிர்மலாதேவி விவகாரம் போன்ற வற்றைச் சேர்த்திருந்தாலும் அவற்றைக் காட்சியாகக் கையாண்ட விதத்தில் பிசுபிசுப்பான சினிமாத் தனத்தால் கிழிந்து தொங்குகின்றன.
எந்தப் போராட்டத்துக்கும் காவல் துறை மாலை நேரத்தில் அனுமதி கொடுப்பதில்லை. மாலைக்கண் நோய்க்கு சிறந்த சிகிச்சை உண்டு என்பதை எடுத்துக்காட்ட, இயக்குநர் விரும்பவில்லை.
நாயகன் தன் குறைபாட்டை இறுதிவரை காதலியிடம் மறைக்க வேண்டிய அவசியத்துக்கான கார ணத்தை அழுத்தமாக உருவாக்கி யிருந்தால், அதை நியாயப்படுத்தும் வசனங்களும், காட்சிகளும் இயக் குநருக்கு கிடைத்திருக்கலாம்.அடிப்படையான இந்த விஷயத் திலேயே இயக்குநர் சறுக்கி விட்டதால், வறட்டு நகைச்சுவைத் தோரணமாக படம் பின்தங்கிவிடு கிறது.
மாலைக்கண் நோயாளியாகவும், அதை மறைக்கப் பாடுபடுபவராக வும் வைபவ் நன்றாக நடித் துள்ளார். அவர் கொடுக்கும் சில ரியாக்ஷன்களும், வசனங்களை உச்சரிக்கும் விதமும் கூடுதலாக ரசிக்க வைக்கின்றன. இதுபோன்ற படங்களின் நாயகி எத்தனை அறி யாமையுடன் இருக்க வேண்டும் என்ற சட்டகத்தை இயக்குநர் பாலக் லால்வாணியிடம் பொருத்தியிருப் பது அவரை வெறும் கவர்ச்சி பொம் மையாக பின்தங்க வைத்து விடுகிறது. இளவரசு, ராதாரவி உள்ளிட்ட அனுபவசாலி நடிகர்கள் தங்கள் இருப்பை வலுவாகப் பதிவு செய்கிறார்கள். சதீஷும், காமெடி ரவுடியாக வரும் ராமரும் ஒருசில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
ஜிப்ரானின் பின்னணி இசை எடுபடும் அளவுக்கு பாடல்களில் சரக்கில்லை. பி.ஜி.முத்தையா வின் ஒளிப்பதிவில் கோணங்களும், நிறக்கலவையும் கண்களை ஈர்க் கின்றன.
பெற்றோருக்கும், உற்ற நண் பனுக்கும் மட்டும் தெரிந்த நாயக னின் மாலைக்கண் நோய், அவரது வாழ்க்கையில் குறுக்கிடும் மற்றவர் களுக்கும் தெரியவரும் சூழ்நிலை உருவானால், அதை அவர் எப்படிச் சமாளிப்பார் என்ற திரைக்கதையின் முக்கிய சவால் முழுமையாகவும் அழுத்தமாகவும் கையாளப்படாத தால் இந்த சிக்சர் வெறும் சிங்கிள்!