

நடிகை எமி ஜாக்சன் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவுள்ளது என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்சன் 'மதராசபட்டினம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'ஐ', 'தங்கமகன்', 'தெறி', '2.0' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் 'ஏக் தீவானா தா', 'ஃப்ரீக்கி அலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
குழந்தையின் பாலினம் அறிதல் வெளிநாடுகளில் சகஜம். மேலும் ஒரு சிலர், என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை ஒரு விழா போலவே கொண்டாடி அறிவிப்பார்கள். அப்படியான ஒரு விழாவில் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, தனக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் ஏமி. மேலும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சனின் காதலர் ஜார்ஜ் பனாயிடூ என்ற தொழிலதிபர். இருவரும் இணைந்திருக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எமி ஜாக்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இருவரும் அடுத்த வருட ஆரம்பத்தில் இத்தாலியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது.
- ஐஏஎன்எஸ்