

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் முத்தக்காட்சி படப்பிடிப்புக்கு 36 டேக் வாங்கி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. சிம்ரன், ஆர்யா ஆகியோர் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஆதிக் இயக்கி வருகிறார். கேமியோ பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் மனிஷா யாதவ் சம்பந்தப்பட்ட முத்தக் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். இக்காட்சிக்கு மட்டும் 36 டேக் வாங்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
மனிஷா யாதவ் ஒன்றுமே சொல்லாமல் கூலாக இருக்க, ஜி.வி.பிரகாஷ் மிகவும் பதற்றமாகி விட்டாராம். இந்த இருவருடனும் இணைந்து ஜோதிலட்சுமியும் இக்காட்சியில் நடித்திருக்கிறார்.
இறுதியாக டேக் ஒ.கே ஆனவுடன் இயக்குநர் ஆதிக், ஒரு வழியாக சரியாக முத்தம் கொடுத்து விட்டார் ஜி.வி. பிரகாஷ் என்று சந்தோஷப்பட்டு இருக்கிறார்.