

விஜய் ஆன்டனி, அருண்விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘அக்னிச்சிறகுகள்’ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கி தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் நடக்க உள்ளது. இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் நவீன் கூறியதாவது:
ஆக்ஷன், சேஸிங் பயணமாக இருக்கும் இப்படம் இஸ்தான்புல் பகுதியில் தொடங்கி நார்வே மலைப்பகுதிகளில் முடிகிறது. இப்போதுவரை இந்தியாவில் எடுக்க வேண்டிய அனைத்துப் பகுதிகளிலும் எடுத்துவிட்டோம். அடுத்த கட்டமாக ஐரோப்பாவின் இஸ்தான்புல், புடாபெஸ்ட், லண்டன், நார்வே உள்ளிட்ட இடங்களில் படமாக்க உள்ளோம். இந்தப் பயணத்தில் விஜய் ஆன்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே, ரைமா சென் நடிக்கின்றனர். அதில், விஜய் ஆன்டனி, அருண் விஜய்க்கு சின்ன பிளாஷ்பேக் காட்சிகள் உள்ளன. அவர்களுக்கான 10, 18 வயது மதிக்கத்தக்க இளையவர்களுக்கான தேடலில் இருக்கிறோம். இப்பணிகள் முடிந்ததும் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளோம்’’ என்றார்.