

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' படத்தில் தனுஷின் 2-வது லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
'வடசென்னை' படத்தைத் தொடர்ந்து, அப்படத்தின் 2-ம் பாகத்துக்கு முன்பாக 'அசுரன்' படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் தனுஷ் 2 கெட்டப்களில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷின் ஒரு கெட்டப்பை மட்டுமே வெளியிட்டது. தற்போது தனுஷின் 2-வது கெட்டப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கெட்டப்புக்கு பலரும் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பிரதான காட்சிகள் படப்பிடிப்பு கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி உள்ளிட்ட பலர் தனுஷுடன் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் பணிகளை முடித்திவிட்டு, சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார் வெற்றிமாறன். இதனை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார்.