

சென்னை
ஒரு படத்துக்கு தேசிய விரு தைவிட பேசிய விருதுதான் பெரிது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
அப்போலோ மருத்துவமனையின் புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம் பேட்டையில் நேற்று நடை பெற்றது. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தலைமையில் நடை பெற்ற விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசிய தாவது: இந்தியாவுக்கு தலை நகரம் டெல்லியாக இருக்க லாம். ஆனால் மருத்துவத் துக்கு சென்னைதான் தலை நகரம். மருத்துவத் துறையில் பத்மஸ்ரீ 2பெறுவது அவ்வளவு எளிதில்லை. அது ஒரு பெரிய வரம்.
சர்க்கரை நோய் உள்ள வர்கள் எல்லாம் சக்கரவர்த் திகள். இந்தியாவில் 90 சத வீதம் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். மொத்த ஜிடிபி யில் 6 சதவீதம் மட்டும்தான் மருத்துவத்துக்கு செலவழிக் கப்படுகிறது. இதில் 1 சதவீதம் மட்டுமே அரசு கொடுக்கிறது. மீதம் உள்ள 5 சதவீதத்தை மக்களே போட்டுக் கொள்கிறார்கள். அரசு விழிப்புற வேண்டும். தற்போது 2,000 பேருக்கு ஒரு டாக்டர்தான் இருக்கிறார். இன்னும் 200 மருத்துவ கல் லூரிகளுக்கான தேவை இருக் கிறது. இன்று மருத்துவத்தின் தேவை இந்தியாவில் அதிக மாக இருப்பதால் 1,000 பேருக்கு ஒரு டாக்டர் வந்தால் தான் தேவை பூர்த்தி அடை யும். இந்தியாவில் இன்னும் 6 லட்சம் டாக்டர்கள் தேவைப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘‘இந்த ஆண்டு நல்ல திரைப்படம் தமிழில் இருப்ப தாக நினைத்தேன். ஆனால் அதற்கு எந்த விருதும் கிடைக் கவில்லை, இதில் அரசியல் இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால் அரசியல் இருந்தால் கண்டிக்கத்தக்கது. விருது கிடைக்கவில்லை என்று தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒரு படத்துக்கு தேசிய விருதைவிட பேசிய விருதுதான் பெரிது. அது தமிழ் படங்களுக்கு கிடைத்துள்ளது’’ என்றார்.
ஜெ.வுக்கு உலகத்தர சிகிச்சை
அப்போலோ குழும தலை வர் பிரதாப் சி ரெட்டி கூறும் போது, “ஜெயலலிதாவுக்கு உலகத் தரம் வாய்ந்த சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. எம்ஜிஆருக்கு நாங்கள் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினோம். ஆணையத் தில் விசாரணை நடத்த போதிய டாக்டர்கள் அடங்கிய குழு இல்லை. சிறந்த டாக்டர்கள், உலகத்தரம் வாய்ந்த டாக்டர் கள் அப்போலோ மருத்துவ மனையில் உள்ளனர். எங் களை விசாரணைக்கு அழைத் தபோது, எதிர்தரப்பில் விசா ரணை ஆணையத்தில் டாக்டர் கள் குழு இல்லாததை ஏற்க முடியாது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மீண்டும் விசா ரணை தொடங்கினால் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்” என்றார்.