

சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘தபாங் 3’ இந்தி படத்துக்காக ராஜஸ்தான் பகுதியில் படப்பிடிப்பு பணியில் பரபரப்பாக இருக்கிறார் பிரபுதேவா. இந்நிலையில் தமிழில் பிரபுதேவா நடித்துள்ள ‘எங் மங் சங்’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘ஊமை விழிகள்’, ‘தேள்’ ஆகிய 4 படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். தற்போது இந்த அனைத்து படங்களின் இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. செப்டம்பர் முதல் ஒவ்வொன்றாக ரிலீஸாக உள்ளன. இதற்கிடையே, தமிழில் அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்களுக்கான கதை கேட்பதிலும் பிரபுதேவா கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கெனவே காதல், காமெடி படங்களில் அதிகம் நடித்துவந்த அவர் இப்போது ஆக்ஷன், திரில்லர் களத்தை அதிகம் விரும்பி கதை கேட்டு வருகிறார்.