மன அழுத்தத்திலிருந்து விடுபட சிகிச்சை எடுத்தேன்: ஆண்ட்ரியா

மன அழுத்தத்திலிருந்து விடுபட சிகிச்சை எடுத்தேன்: ஆண்ட்ரியா
Updated on
1 min read

மன அழுத்ததிலிருந்து மீள வேலைக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு சிகிச்சையில் இருந்ததாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ’ப்ரோக்கன் விங்க்’ என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீடு சமீபத்தில் பெங்களூரில் நடந்தது.

இந்தப் புத்தகத்தில் சோகமான பல வரிகள் காணப்படுகிறதே என்று நிகழ்வுக்கு வந்தவர்கள் ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஆண்ட்ரியா பதிலளித்து பேசும்போது, “ நான் திருமணமானவருடன் நட்புறவில் இருந்தேன் அவர் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். இதன் காரணமாக நான் மன அழுத்ததிற்கு உள்ளாக்கப்படேன். இதிலிருந்து விடுபட வேலையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று கொண்டேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இந்தப் புத்தகத்தில் தைரியமாக குறிப்பிட்டு இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரியா தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்திலும் தனது புத்தகம் குறித்த தகவலை பதிவிட்டிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in