இதுலயும் ‘கண்டம்’ இருக்கு!

இதுலயும் ‘கண்டம்’ இருக்கு!
Updated on
1 min read

மகேஸ்வரியுடன் இணைந்து ஜீ தமிழ் சேனலில் ‘பேட்ட-ராப்’ நிகழ்ச்சியை கலகலப்பாக வழங்கிவருகிறார் தீபக்.

இதுகுறித்து பேசிய தீபக், ‘‘தென்னிந்திய அளவில் சேனல் உலகில் மிகுந்த கவனம் ஈர்த்த ஜீ தமிழ் ‘சூப்பர் மாம்ஸ்’ நிகழ்ச்சியின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த முறையும் நிறைய புதுப்புது நட்சத்திரங்கள், அவர்களது சுட்டீஸ் என்று கலக்க உள்ளோம். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும்’’ என்றார்.

இதற்கிடையில், தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதன் அறிவிப்பையும் தீபக் விரைவில் வெளியிட உள்ளார். ‘‘இன்னும் சில நாட்கள் படப்பிடிப்புதான் பாக்கி. ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தில் கலகலப்பான காமெடி விஷயங்கள் இருந்ததுபோல, இந்த படத்தில் திகில் கலந்த காமெடி விருந்து இருக்கும். தவிர, இந்த முறையும் தலைப்பில் ‘கண்டம்’ என்ற வார்த்தை இடம்பெறும். அது என்ன கண்டம் என்பது சஸ்பென்ஸ். தெலுங்கு சினிமாவில் சக்கப்போடு போடும் பஞ்சாபி பொண்ணு தாருணி சிங்தான் இந்த படத்தில் எனக்கு ஜோடி. மொட்டை ராஜேந்திரன், மனோபாலா என 13 முக்கிய நட்சத்திரங்களும் இப்படத்தில் இருக்காங்க’’ என்கிறார் தீபக்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in