ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது ரஜினி முருகன்?

ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது ரஜினி முருகன்?
Updated on
1 min read

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் 'ரஜினி முருகன்' எப்போது வெளியாகும் என்பதை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

'உத்தம வில்லன்' படத்தின் தோல்வியால் பெரும் கடன் சுமையில் சிக்கி இருக்கிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். 'ரஜினி முருகன்' ஜூலை 17ம் தேதி வெளியீடு என்று நீண்ட நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும், பண சிக்கலால் இறுதி கட்டப் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது.

இசை மற்றும் டீஸர் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

"இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டப்பிங் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும். பின்னணி இசை மற்றும் டி.ஐ பணிகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் துவங்கப்பட இருக்கிறது. பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். 'ரஜினி முருகன்' எப்போது வெளியீடு என்பதை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்க இருக்கிறோம்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

'ரஜினி முருகன்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in