'பிங்க்' ரீமேக்கிற்கு ஒப்புதல்: அஜித்துக்கு பார்த்திபன் வாழ்த்து

'பிங்க்' ரீமேக்கிற்கு ஒப்புதல்: அஜித்துக்கு பார்த்திபன் வாழ்த்து
Updated on
1 min read

'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டதற்காக அஜித்துக்கு பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 8) வெளியாகியுள்ளது.

'விஸ்வாசம்' படத்துக்குப் பிறகு வெளியாகியுள்ள அஜித் படம் என்பதால், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் பலருமே இந்தப் படத்தைத் தேர்வு செய்து நடித்ததிற்காக அஜித்தைப் பாராட்டி வருகிறார்கள்.

'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்ததிற்காக நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில், “நேரு கொண்ட பார்வை, காங்கிரஸ் கொண்ட பார்வை, Bjp கொண்ட பார்வை, காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை-பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக.

ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in