பல காட்சிகள் நீக்கம்: மறுதணிக்கைக்குச் செல்லும் பாரிஸ் பாரிஸ்

பல காட்சிகள் நீக்கம்: மறுதணிக்கைக்குச் செல்லும் பாரிஸ் பாரிஸ்
Updated on
1 min read

பல காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் கூறியதால், மறுதணிக்கைக்குச் செல்கிறது 'பாரிஸ் பாரிஸ்' திரைப்படம்

இந்தியில் கங்கணா ரணாவத் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'குயின்'. இதன் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் மனுகுமரன். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கவும் தொடங்கினார்.

தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் 'பாரிஸ் பாரிஸ்', தெலுங்கில் தமன்னா நடிப்பில்  'தட்ஸ் மகாலட்சுமி' , கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் 'பட்டர்ஃபிளை'  மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் 'ஜாம் ஜாம்' 'குயின்' ரீமேக் உருவாகியுள்ளது.

இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய படங்களுக்குத் தணிக்கை கிடைத்துவிட்டது. ஆனால் தமிழ் ரீமேக்கான 'பாரிஸ் பாரிஸ்' படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

பல ஆடியோக்கள் ம்யூட், பல வீடியோக்கள் நீக்கம் மற்றும் காட்சி இருட்டடிப்புகள் செய்ய வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் கூறியதால் படக்குழுவினர் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து மறுதணிக்கைக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 

மறுதணிக்கைப் பணிகள் முடிவடைந்தவுடன், படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தப் படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in