Published : 05 Aug 2019 10:05 AM
Last Updated : 05 Aug 2019 10:05 AM

'பிகில்' அப்டேட்: விஜய்யுடன் நடனமாடும் ஏ.ஆர்.ரஹ்மான்

'பிகில்' படத்தில் 'சிங்கப்பெண்ணே' பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து ஒரு காட்சியில் தோன்றவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக  வரவுள்ளது. இந்தப் படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு, தற்போது சிறுசிறு காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகின்றன.

நேற்று (ஆகஸ்ட் 4) கூட சென்னைக்கு வெளியே, விலையுர்ந்த பைக் ஒன்றை விஜய் ஓட்டுவது போன்ற காட்சியைப் படமாக்கியது படக்குழு. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தப் படத்தில் இடம்பெற்ற  'சிங்கப்பெண்ணே' என்ற பாடலை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. தற்போது இந்தப் பாடல் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

இந்நிலையில் 'சிங்கப்பெண்ணே' பாடலில் விஜய்யுடன் இணைந்து ஒரு காட்சியில் தோன்றியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். பல்வேறு இசை ஆல்பங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றியிருந்தாலும், படத்தில் அவர் தோன்றுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x