

'தெனாலிராமன்' படத்தினைத் தொடர்ந்து மீண்டும் வடிவேலு - யுவராஜ் இணையும் படத்திற்கு ஜுலை மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
நீண்ட நாள் கழித்து வடிவேலு நாயகனாக நடித்து வெளியான படம் 'தெனாலிராமன்'. யுவராஜ் தயாளன் இயக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது மீண்டும் வடிவேலு - யுவராஜ் இணைந்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்து இயக்குநர் தயாளனை தொடர்பு கொண்டு கேட்ட போது, "18 ம் நூற்றாண்டில் பயணமாகும் இந்தப்படம் வரலாற்று படமல்ல. இதுவரைக்கும் யாரும் எதிர்பாராத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதில் முழுக்க கற்பனையை தெளித்து திரைக்கதையை எழுதி வருகிறேன். இப்படத்தின் வேலைகளை ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.