

இந்தியன் 2’ படத்துக்காக விறுவிறுப்பாக கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். சென்னை, வட இந்தியா, வெளி நாடுகள் என முனைப்புடன் நடக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்க உள்ளது.
அரசியல் பணிகள், ’பிக் பாஸ்’, தனது சொந்தப்படமான ‘தலைவன் இருக்கிறான்’ ஆகிய வேலைகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருவதால், இடையிடையே அவருக்கு பிரேக் கொடுத்து படப்பிடிப்பு நடத்தும் வண்ணம் கால்ஷீட்களை திட்டமிட்டுக்கொண்டுள்ளது படக்குழு. இதற்கிடையே விஜய் நடிப்பில் அடுத்தப் படத்தை செய்வதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அப்படத்தின் கதைக்களம் ‘முதல்வன்’ பாணியில் அமைய வேண்டும் என்பதுதான் விஜயின் விருப்பம். அதையே தனது திட்டமாகவும் கொண்டு ‘முதல்வன் 2’ வேலைகளிலும் ஷங்கர் ஈடுபட்டு வருவதாக ஷங்கரை சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.