

அஜித், விஜய் ரசிகர்கள் நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும். உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும் என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தை இழிவுபடுத்தும் வகையில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் விஜய்யை இழிவுபடுத்தும் வகையில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
இளைஞர்களின் இந்த மனநிலையை கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் சிபிராஜ் ஆகியோர் விமர்சித்தனர். இந்நிலையில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி அறிவுரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''நெகட்டிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் அஜித், விஜய் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும்'' என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.