அருவருப்பாக இருக்கிறது: விஜய்க்கு எதிரான ஹேஷ்டேக் தொடர்பாக சிபிராஜ் காட்டம்

சிபிராஜ் | கோப்புப் படம்
சிபிராஜ் | கோப்புப் படம்
Updated on
1 min read

அருவருப்பாக இருக்கிறது என்று விஜய்க்கு எதிரான ஹேஷ்டேக் ட்ரெண்ட் தொடர்பாக, சிபிராஜ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலையிலிருந்தே, அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையேயான ட்விட்டர் ஹேஷ்டேக் மோதல் தொடங்கியது. ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்க, மற்றொருவருக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கி அதை ட்ரெண்ட் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், அஜித்தின் திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை' அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தை இழிவுபடுத்தும் வகையில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர் விஜய் ரசிகர்கள். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் விஜய்யை இழிவுபடுத்தும் வகையில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

இதனை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின் கடுமையாகச் சாடியிருந்தார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பதிவில், “சில முட்டாள்கள் எதிர்மறையான ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்வது அருவருப்பாக இருக்கிறது. இது ஒரு மனிதரை வலிமைப்படுத்தும் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. அடுத்த முறை அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கட்டும் முட்டாள்களே” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in