அட்லீ - விஜய் படப்பிடிப்பு துவங்கியது

அட்லீ - விஜய் படப்பிடிப்பு துவங்கியது
Updated on
1 min read

தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'புலி' படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'புலி' படத்தின் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து அட்லீ இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் விஜய்.

ஈ.சி.ஆர் சாலையில் உள்ள கேரளா ஹவுஸில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. ஆனால், அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று முதல் இப்படத்தின் தொடர் படப்பிடிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. இப்படக்குழுவிடம் விசாரித்தபோது, "140 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து அதே அளவிலான நாட்கள் இறுதி கட்டப் பணிகளும் நடைபெற இருக்கிறது. சமந்தா, ஏமி ஜாக்சன், மீனாவின் மகள், பிரபு, ராதிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்தின் பாடல்கள் முடித்துக் கொடுத்துவிட்டார்.

'மூன்று முகம்' என்பது தான் படத்தலைப்பு என செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.” என்று தெரிவித்தார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in