

விஜய் டிவியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிவரும் ‘எங்கிட்ட மோதாதே’ தொடரில் இந்த வாரம் புதுமுகங்கள் அலங்கரிக்கும் ‘ஆயுத எழுத்து’, ‘பாரதி கண்ணம்மா’ ஆகிய 2 தொடர்களின் நாயகன், நாயகிகள் கலந்துகொள்கின்றனர்.
இதுகுறித்து சேனல் தரப்பில் கூறும்போது, ‘‘நெடுந்தொடர் நடிகர், நடிகைகளின் போட்டிகள், விளையாட்டுகள் என்று ‘எங்கிட்ட மோதாதே’ நிகழ்ச்சி நகர்ந்துவந்தது. அதில் இந்த வாரம் நெடுந்தொடர் நாயகர்கள், நாயகிகளின் காதல் பாடல் திருவிழா அரங்கேற்றம் இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு கலகலப்பான விஷயங்கள் அதில் இடம்பெறும். அதிலும் புதுமுகங்கள் நடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தொடர் நாயகன், நாயகியும், புதிய வரவாக வந்துள்ள ‘ஆயுத எழுத்து’ தொடர் நட்சத்திரங்களும் நேரடியாக களத்தில் இறங்கி நடனமாடி கலக்கியுள்ளனர்.
பாடலுக்கு தனியே நடனம் அமைத்து உருவாக்கப்பட்ட சுற்று இந்த வாரத்தில் காதல், காமெடி, ரொமான்ஸ் என கலவையாக இருக்கும். அதோடு நிகழ்ச்சியின் இறுதியில் குண்டு வெடிக்கும் சுற்று பெரிதும் ஈர்ப்பை உருவாக்கும்’’ என்கின்றனர்.