மூணு பேர் கூடி ஆடும் ஆட்டம்தான் ‘அக்னி சிறகுகள்’- அனுபவம் பகிர்கிறார் ‘மூடர்கூடம்’ எம்.நவீன்

மூணு பேர் கூடி ஆடும் ஆட்டம்தான் ‘அக்னி சிறகுகள்’- அனுபவம் பகிர்கிறார் ‘மூடர்கூடம்’ எம்.நவீன்
Updated on
2 min read

சந்திப்பு : மகராசன் மோகன்

விஜய் ஆன்டணி, அருண் விஜய், ஷாலினி பாண்டே நடிப்பில் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளில் லொக்கேஷன்கள் தேர்வு செய்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் இயக்குநர் எம்.நவீன். ‘மூடர்கூடம்’ படத்தை தொடர்ந்து தனது தயாரிப்பில் ‘கொளஞ்சி’, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என அடுத்தடுத்த பரபரப்புக்கு தயாராகியுள்ள எம்.நவீனுடன் ஒரு நேர்காணல்:

‘கொளஞ்சி’ படத்தின் முன் னோட்டத்தைப் பார்க்கும்போது இதுவும் அப்பா, மகனுக்கான உறவைப் பேச வந்துள்ள ஒரு படம் மாதிரி இருக்கே?

என்னோட ‘மூடர்கூடம்’ திரைப் படம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டாலும், என்னோட உறவுக் காரங்க அத்தை, சித்தி, பெரியம்மா கிட்ட படத்தை போட்டுக் காட்டும் போது, ‘என்னடா நவீனு ஒரே ரூம். இங்கேயும், அங்கேயும் போய்ட்டு வந்துகிட்டே இருக்காங்க. என் னமோ நடக்குது. ஒண்ணும் புரிய லையே’ன்னு சொன்னாங்க. படம் ஒரு கட்டத்துல நல்ல பாராட்டை பெற்றாலும், ஆரம்பத்துல அது எல்லோருக்குமான படமாக இல்லை. அதை சரி செய்யணும்னு நினைத்துக்கொண்டிருந்த நேரத் துலதான் ‘கொளஞ்சி’ படத்தோட இயக்குநர் தனராம் சரணவன் இந் தக் கதையோட வந்தார். அதில் சின்னச் சின்ன ஐடியாக்களை சேர்த்து சமுத்திரக்கனி அண் ணனை ஒரு பெரியாரிஸ்ட் மாதிரி யான ஒரு கலகலப்பு மனிதராக மாற்றி கதை, வசனங்களை இரு வருமா சேர்ந்து மெருகேத்தி னோம்.

இது அப்பா, மகன் கதைதான். திருமணம் ஆகாத பசங்க கொளஞ்சி கதாபாத்திரத்தோட கனெக்ட் செய்துப்பாங்க. திரு மணம் ஆனவங்க சமுத்திரகனி அண்ணனோட கேரக்டரோட ஒன் றிடுவாங்க. ஆக மொத்தம் இது வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த சமூகத்துக்கான படம். அதுவும் கலகலப்பான கமர்ஷியல் களத்துல இருக்கும்!

டிக்டாக், ஃபேஸ் ஆப் என சமூக வலைதள மைதானத்தில் கவனம் செலுத்தும் இன்றைய கிராமத்து இளைஞர்கள் கிட்டிப்புல், கிரிக்கெட் என விளையாட்டு மைதானங் களில் இப்போதெல்லாம் இருப்ப தில்லையே? உங்கள் படத்தில் அதெல்லாம் பின்னோட்டமாக தென்படுகிறதே?

கிராமங்களை செல்போன், தொலைக்காட்சி ஆட்கொண்டிருக் கிறது என்பது உண்மைதான். அதையும் கடந்து சில உட் கிராமங்களில் இன்றைக்கும் மினி பஸ் போவது, பெட்டிக்கடை, ஆலமர அடிவாரத்தில் அமர்ந்து களைப்பாறுவது என இருக்கத்தான் செய்கிறது. அப்படி இந்தப் படத்தில் வரும் கிட்டிப்புல் விளையாட்டு, கிரிக்கெட் விளையாட்டு எல்லாம் பழைய விளையாட்டு முறைகளை நினைவுபடுத்தினாலே போதும். அதுவே ஒரு வெற்றிதான். இந்தப் படம் முழுக்க ராசிபுரம் அருகே, இயக்குநர் தனராம் சரவணனோட சொந்த ஊரான கடந்தப்பட்டியி லேயும், ஈரோடு பக்கத்துல இருக் குற எங்க ஊரான கொக்கராயன் பேட்டையைச் சுற்றியும் படப் பிடிப்பு நடத்தியிருக்கோம். இந்த ‘கொளஞ்சி’ கிராமத்து மனுஷங் களோட வாழ்க்கை பற்றிய ஒரு பதிவாக இருக்கும்.

‘அலாவுதீனின் அற்புத கேரமா’ படத்தின் முழு வேலைகளும் முடிந் ததுதானே?

‘மூடர்கூடம்’, ‘கொளஞ்சி’ படங் களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட களம். ஃபேண்டஸி, திரில்லர்னு பயணிக்கும். முழு படமும் தயார். ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகலாம். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத் தாலி, உக்ரைன்னு 7 நாடுகளில் படப்பிடிப்பு நடத்தின படம். ‘மூடர் கூடம்’ படத்துக்கு அடுத்தப்படியாக என் இயக்கத்துல வர்ற படம்னு ரொம்பவே வித்தியாசத்தோடு உரு வாக்கின களம். படம் பார்க்குற வங்க என்ன சொல்லப்போறாங் கன்னு பார்ப்போம்!

‘அக்னி சிறகுகள்’ கூட்டணிப் பற்றி?

அது ஒரு நாள் காலை நேரம். விஜய் ஆன்டணிக்கிட்டே இருந்து ‘நாம ஒரு படம் பண்ணுவோம். கதை சொல்ல வேண்டாம். உங்களுக்கு சரியா இருக்கும்னா அந்த வேலையை தொடங்குவோம், நவீன்?’னு போன் வந்தது. எனக்கு ரொம்ப சந்தோஷம். பிடித்தமான மனிதர் விஜய் ஆன்டணி. இந்த வாய்ப்பை விடக்கூடாது என கதை தயார் செய்கிற வேலையில் இறங்கி உருவாக்கின படம்தான் ‘அக்னி சிறகுகள்’. இது இப்போ அம்மா கிரியேஷன் சிவா, விஜய் ஆன்டணி, அருண் விஜய், ஷாலினி பாண்டேன்னு ஒரு நல்ல குழுவோடு பயணிக்கிறது. அடுத்த மாதம் ஐரோப்பாவில் 50 நாட்கள் படப் பிடிப்பு இருக்கு. கமர்ஷியல் பின் னணியில் ஆக்‌ஷன். அதுல ஒரு எமோஷன், கதைன்னு ஓடும். தனி ஒரு மனிதனோட டிராவலாக இல்லாமல் விஜய் ஆன்டணி, அருண் விஜய், ஷாலினி பாண்டே இவங்க மூணு பேரும் கூடி ஆடும் ஆட்டமாக இருக்கும். அதனால தான் இந்த ஆட்டத்துக்கு ‘அக்னி சிறகுகள்’ என்ற தலைப்பை தேர்வு செய்தோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in