

பாலாஜி மோகன் தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், தயாரிக்கவுள்ள முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடிப் பேசவும்', 'மாரி', 'மாரி 2' ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். சில நாட்களுக்கு முன்பு, தான் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
'ஓபன் விண்டோ' என்று பெயரிடப்பட்டுள்ள தன் நிறுவனத்தின் மூலம் படங்கள், வெப் சிரீஸ், குறும்படங்கள் போன்றவற்றை தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார் பாலாஜி மோகன். இதில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'மண்டேலா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின். இயக்கவுள்ளார். யோகி பாபு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று (ஜுலை 24) முதல் தொடங்கப்பட்டுள்ளது.